2016-08-25 16:14:00

இந்திய அஞ்சல்துறை அன்னை தெரேசாவைக் கவுரவிக்கின்றது


ஆக.25,2016. அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், வருகிற செப்டம்பர் 4ம் தேதி புனிதராக அறிவிக்கப்படவிருப்பதையொட்டி, சிறப்பு அஞ்சல் மேலுறை ஒன்றை வெளியிடவுள்ளது இந்திய அஞ்சல் துறை.

அன்னை தெரேசாவின் உருவப்படம் கொண்ட, முழுவதும் பட்டாலான, சிறப்பு அஞ்சல் மேலுறை மற்றும் நாணயம், வருகிற செப்டம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்றும், இத்தகைய அஞ்சல் மேலுறையை வெளியிடுவது இதுவே முதன்முறை என்றும், இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

அன்னை தெரேசா அவர்கள் பிறந்த நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2010ம் ஆண்டில், இந்திய அரசு வெளியிட்ட 5 ரூபாய் நாணயம், இந்த சிறப்பு அஞ்சல் மேலுறையில் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும், இந்த அஞ்சல்களை வடிவமைத்த Alok K Goyal அவர்கள் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, அன்னை தெரேசா அவர்கள், புனிதராக அறிவிக்கப்படவிருப்பதையொட்டி 95 சென்ட் மதிப்புடைய தபால் தலையை வத்திக்கான் அஞ்சல் துறையும், அன்னையவர்கள் பிறந்த மசடோனியா நாடு, தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி நாணயத்தையும் வெளியிடவுள்ளன.   

ஆதாரம் : Financial Expres / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.