2016-08-24 16:46:00

இத்தாலிய ஆயர் பேரவை பத்து இலட்சம் யூரோக்கள் உதவி


ஆக.24,2016. இத்தாலியில், நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதியான, ரியேத்தி ஆயர் Domenico Pompili அவர்களுக்குத் தொலைபேசி வழியாக, தனது ஆறுதலையும், செபத்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

லூர்து திருத்தலத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டுள்ள ஆயர் Pompili அவர்கள், இச்செய்தி அறிந்து உடனே இத்தாலி திரும்பி, பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவசரகால உதவியாக, இத்தாலிய ஆயர் பேரவை, பத்து இலட்சம் யூரோக்களை வழங்கியுள்ளது.

செப்டம்பர் 18ம் தேதி, ஞாயிறன்று இத்தாலியின் அனைத்து ஆலயங்களிலும், இம்மக்களுக்கென சிறப்பு உண்டியல் எடுக்கப்படும் எனவும், இத்தாலிய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.   

இன்னும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருந்து, அவர்களின் வேதனைகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில், ஆஸ்கொலி பிசெனோ ஆயர் ஜொவான்னி எர்க்கோலெ அவர்கள், பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்றுள்ளார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.