2016-08-22 16:43:00

மெத்தடிஸ்ட் கிறிஸ்தவசபை கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி


ஆக.,22,2016.  இத்தாலியின் டூரின் நகர் அருகே இடம்பெற்றுவரும் வல்தேசி  மெத்தடிஸ்ட் கிறிஸ்தவசபைகளின் மன்றக் கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து பயணிப்பதற்கான செபத்துடன், திருத்தந்தை அவர்கள், தன் வாழ்த்துக்களையும் இந்த கிறிஸ்தவ மன்றத்திற்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி அறிவிக்கவேண்டிய கடமையை அறிந்துள்ள இவ்விரு சபைகளுக்குமுள்ள கருத்து வேறுபாடுகளால், ஏழைகள், குடிபெயர்ந்தோர், நோயாளிகள் ஆகியோர்களுக்கான சேவையில் ஒன்றிணைந்து உழைப்பது தடைபடாது எனவும் திருத்தந்தையின் செய்தியில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இயற்கை பாதுகாப்பிலும், கிறிஸ்தவ சபைகளும் கத்தோலிக்க திருஅவையும் ஒன்றிணைந்து உழைக்க முடியும் என்பதும், அச்செய்தில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.