2016-08-19 15:36:00

இதயயியல் பற்றிய உலக மாநாட்டில், ஆகஸ்ட் 31ல் திருத்தந்தை


ஆக.19,2016. “செபிப்பது அர்த்தமற்றதாகத் தோன்றினாலும்கூட, செபிப்பதை ஒருபோதும் கைவிடாதீர்கள்” என்ற வார்த்தைகளை, தனது டுவிட்டரில் இவ்வியாழன் மாலையில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஐரோப்பிய இதயயியல் கழகம், இம்மாதம் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை, உரோமையில் நடத்தும் அனைத்துலக மாநாட்டின் இறுதி நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதில் கலந்து கொள்வதற்குச் செல்வார் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 31, புதனன்று, பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னர், உரோம் ஃபியெரா சென்று, இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்குத் தனது வாழ்த்தையும், ஆசீரையும் வழங்குவார் என்றும், அச்செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

இந்த அனைத்துலக மாநாட்டில், இதயயியல் நிபுணர்கள், மருத்துவர்கள், மருந்து தயாரிப்போர் என, 140 நாடுகளிலிருந்து, ஏறத்தாழ 35 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, இத்தாலிய இதயயியல் கூட்டமைப்பின் தலைவர் லெயோனார்தோ பொலேஞ்ஞேசே அவர்கள் வத்திக்கான் வானொலியில் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.