2016-08-19 16:07:00

Zhejiang மருத்துவமனைகளில் மத வழிபாட்டிற்குத் தடை


ஆக.19,2016. சீனாவின் Zhejiang கிழக்கு மாநிலத்தின் பொது மருத்துவமனைகளில், அனைத்து விதமான மத நடவடிக்கைகளையும் தடை செய்துள்ளனர் அதிகாரிகள்.

“சீனாவின் எருசலேம்” என்று ஒரு காலத்தில் அறியப்பட்ட Wenzhou நகரின் மத்திய மருத்துவமனையின் முக்கிய அறையில் ஒட்டப்பட்டுள்ள அறிக்கையில், இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

செவிலியரும், பணியாட்களும், இது குறித்து நோயாளர்களுக்கும், பார்வையாளருக்கும் அறிவிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளனர்.

பிரிந்த கிறிஸ்தவ சபை ஒன்றினால் கட்டப்பட்ட இந்த மத்திய மருத்துவமனையை, அக்கிறிஸ்தவ சபையே பல ஆண்டுகளாக, நிர்வகித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

சிலுவை, ஆலயங்கள் மீது தடை விதித்த Zhejiang அரசு, தற்போது வழிபாடுகள் மீதும் தடை விதித்துள்ளது என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.