2016-08-18 14:56:00

இது இரக்கத்தின் காலம் : உயிரினங்கள் மீது இரக்கம்


தந்தை ஒருவர், தன்னுடைய பன்னிரண்டு வயது மகளிடம், தங்கள் வீட்டுப் புல்தரையைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்துமாறு கூறினார். அதற்குத் தகுந்த வெகுமதி அளிப்பதாகவும் வாக்களித்தார். அந்தச் சிறுமியும், அந்த வேலையில் மிகுந்த ஆர்வமுடன் ஈடுபட்டார். அன்று மாலைக்குள், மொத்த புல்தரையும் கத்தரிக்கப்பட்டு, அழகாகக் காட்சியளித்தது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும், ஒரு கொத்துப்புல்லை சிறுமி கத்தரிக்காமல் அப்படியே விட்டு வைத்திருந்தார். அதைப் பார்த்த தந்தை, தான் வாக்களித்தபடி வெகுமதியைத் தர மறுத்துவிட்டார். காரணம், ஓர் இடம்கூட மீதம் வைக்காமல் மொத்தப் புல்தரையையும் கத்தரிக்க வேண்டும் என்பதே நிபந்தனை. அந்தச் சிறுமியும், தனக்கு வெகுமதி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால், அந்தப் கொத்துப்புல்லை மட்டும், தான்  கத்தரிக்கப் போவதில்லை என்று தீர்மானமாகக் கூறிவிட்டார். தன் மகள் இப்படி ஏன் சொல்கிறார் என்பதை அறிந்துகொள்ள விரும்பிய தந்தை, கத்தரிக்கப்படாத அந்தப் புல்கொத்து அருகில் சென்று பார்த்தார். அதன் நடுவே, ஒரு தேரை அமர்ந்திருந்தது.  சிறுமி இளகிய மனதுடன், தேரைக்காக, அந்தப் பகுதியை மட்டும் கத்தரிக்காமல் விட்டு வைத்திருந்தார் என்பதைப் புரிந்துகொண்டார் தந்தை. கருணைக் கடலான இறைவா, எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டும் வரம் அருள்வாயாக.         

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.