2016-08-15 15:53:00

மத வேறுபாடு நோக்காமல் வீடுகள் வழங்கிய உஜ்ஜெயின் மறைமாவட்டம்


ஆக.15,2016. வீடற்ற மக்களுக்கு இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில் வீடு கட்டிக் கொடுக்கும் இந்தியாவின் உஜ்ஜெயின் மறைமாவட்டத் திட்டத்தால் பயன்பெற்றவர்களில் பாதிபேர் இந்து மதத்தினர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

60 இலட்சம் இந்துக்களையும், ஐந்தாயிரம் கத்தோலிக்கர்களையும் கொண்டுள்ள உஜ்ஜெயின் மறைமாவட்டத்தில், வீடின்றி மழைக்காலத்தில் துன்புறும் மக்களுக்கு தங்குமிடங்களைக் கட்டிக்கொடுப்பதே, இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில் தங்கள் சிறந்த பணி என உணர்ந்ததாக உரைத்தார், அம்மறைமாவட்ட ஆயர் Sebastian Vadakkel.

கடவுளின் அன்பிற்கு சாதி, மதம், மொழி என எத்தடையும் இல்லை என்பதை மனதில் கொண்டு இச்சேவையை ஆற்றியதாக உரைத்த ஆயர் Vadakkel அவர்கள், உஜ்ஜெயின் மறைமாவட்டம் தன் 50ம் ஆண்டை 2019ம் ஆண்டில் சிறப்பிக்கும்போதும், தங்குமிடங்களை கட்டிக் கொடுக்கும் பணி தொடரும் என தெரிவித்தார்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.