2016-08-13 16:13:00

உலக கண்பார்வை தினம் ஆகஸ்ட் 13


ஆக.13,2016. உலகில் எல்லாருக்கும் கண் பாதுகாப்பு என்ற தலைப்பில், உலக பார்வை தினம் ஆகஸ்ட் 13, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டது. 

பார்வையிழப்பைத் தடுப்பதற்கான உலகளாவிய நிறுவனத்தின் கணிப்புப்படி, உலகில், 28 கோடியே 50 இலட்சம் பேரின் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், சரியான நேரத்தில் கண் சிகிச்சை பெற்றிருந்தால், இவர்களில் 80 விழுக்காட்டினரின் பார்வைத்திறன் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிகிறது.   

மேலும், இந்நாளையொட்டிப் பேசிய, இந்தியாவில் கண்தானத்தை ஊக்குவித்துவரும் கிளேரிசியன் அருள்பணி ஜார்ஜ் கண்ணன்தானம் அவர்கள், விழிவெண்படலம் மாற்று அறுவைச் சிகிச்சை வழியாக, ஐந்து பேரில் ஒருவர் வீதம், இழந்த பார்வையை மீண்டும் பெற முடியும் என்று கூறினார்.

இந்தியாவில் ஒரு கோடியே 50 இலட்சம் பேர் பார்வையிழந்தவர்கள் என்றும், இவர்களில் இருபது விழுக்காட்டினர் விழிவெண்படலம் மாற்று அறுவைச் சிகிச்சை வழியாக, பார்வையை மீண்டும் பெற இயலும் என்றும் அருள்பணி கண்ணன்தானம் அவர்கள் கூறினார்.

இந்தியாவுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் விழிவெண்படலங்கள் தேவைப்படுகின்றன, ஆனால், முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரையிலான விழிவெண்படலங்களே கிடைக்கின்றன என்றும் கூறினார் அருள்பணி கண்ணன்தானம். 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.