2016-08-09 15:57:00

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள லெசோத்தோவுக்கு திருத்தந்தை உதவி


ஆக.09,2016. லெசோத்தோ மற்றும் ஆப்ரிக்காவின் தென் பகுதி, எல் நீனோ காலநிலையால் கடும் வறட்சியை எதிர்நோக்கிவரும் வேளை, லெசோத்தோ மக்களுக்கு அவசரகால உதவியாக, நான்கு இலட்சம் டாலரை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தென்னாப்ரிக்கா, லெசோத்தோ, போஸ்ட்வானா, நமீபியா மற்றும் சுவாசிலாந்து நாடுகளுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Peter Bryan Wells அவர்கள், திருத்தந்தையின் இவ்வுதவியை, லெசோத்தோ அரசர் மூன்றாம் Letsie அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.

திருத்தந்தையின் இவ்வுதவி பற்றி ஆப்ரிக்க இதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த பேராயர் Wells அவர்கள், மக்கள் கடும் துன்பத்தை எதிர்நோக்கும் இவ்வேளையில், இவ்வுதவி மிகவும் முக்கியமானதாக நோக்கப்படுகின்றது என்று கூறினார்.

எல் நீனோ காலநிலையால், அதிகமாகத் தாக்கப்பட்டுள்ள  லெசோத்தோ நாட்டின் வேளாண் உற்பத்தி 62 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் அந்நாட்டின் பத்து மாவட்டங்களில் ஐந்து இலட்சம் மக்கள் கடும் பசிக்கொடுமையால் துன்புறுகின்றனர்.

ஆதாரம் : OR / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.