2016-08-08 15:38:00

விவாகரத்து அனுமதிக்கு எதிராக பிலிப்பீன்ஸ் ஆயர்கள்


ஆக.08,2016. பிலிப்பீன்ஸ் நாட்டில் கொண்டுவரப்பட உள்ள விவாகரத்து அனுமதி சட்டம் குறித்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

விவகாரத்தை சட்டப் பூர்வமாக அனுமதிக்கும் சட்டப் பரிந்துரை குறித்து எதிர்ப்பை வெளியிட்ட மணிலாவின் துணை ஆயர் Broderick Pabillo அவர்கள், குடும்பங்களை பலப்படுத்த சட்டங்கள் உதவ வேண்டுமேயொழிய, பலவீனப்படுத்த அல்ல, ஏனெனில் விவாக இரத்துக்களால் நாடுகள் அனுபவித்துவரும் பேரிழப்புக்களை நாம் அறிவோம் என்றார்.

குடும்பங்களை பலவீனப்படுத்துவதன் வழியாக அதிக அளவில் பாதிக்கப்படப்போவது குழந்தைகளே என்பதால், விவாகரத்து அனுமதியை கைவிட்டு, குடும்பங்களையும் சமுதாயத்தையும் பலப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம் என்றார் பிலிப்பீன்சின் Balanga ஆயர் Ruperto Santos.

ஆதாரம் : Catholic Culture / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.