2016-08-08 15:32:00

ஏழை அகதி தாய்மார்களுக்கென லெபனானில் புதிய காரித்தாஸ் இல்லம்


ஆக.08,2016. வெளிநாடுகளிலிருந்து அகதிகளாக லெபனான் நாட்டிற்குள் புகுந்து, உதவியில்லாமல் வாழும் பெண்களுக்கென, தலைநகர் பெய்ரூட்டில் இல்லம் ஒன்றைத் துவக்கியுள்ளது, லெபனான் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

குடும்ப வன்முறை, ஆள் கடத்தல், குடிபெயர்வோர் மீதானத் தாக்குதல்கள் போன்றவற்றால் துன்பங்களை அனுபவித்துள்ள மக்களுக்கென திறக்கப்பட்டுள்ள இந்த இல்லத்தில், தற்போது பெருமளவில் சிரியா நாட்டு பெண்களே புகலிடம் தேடியுள்ளதாக காரித்தாஸ் அமைப்பு அறிவிக்கிறது.

தங்கள் குழந்தைகளுடன் தங்க அனுமதிக்கப்படும் தாய்மார்கள், இந்த இல்லத்தில் மருத்துவ உதவிகள், சட்ட உதவிகள், உளவியல் தொடர்புடைய உதவிகள் போன்றவற்றைப் பெறுவதுடன், வேறு வேலைகளையும், தங்குமிடங்களையும் தேட வழிகாட்டப்படுகின்றனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.