2016-08-02 16:39:00

தென் சூடானின் கத்தோலிக்க பள்ளிகளில் மக்கள் அடைக்கலம்


ஆக.,02,2016. தென் சூடானின் Wau பகுதியில் அரசு துருப்புகளுக்கும் போராளிகளுக்கும் இடையே இடம்பெறும் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், கத்தோலிக்க பள்ளிகளிலும், நிறுவனங்களிலும் அடைக்கலம் தேடியுள்ளதாக அந்நாட்டு வானொலி அறிவிக்கின்றது.

குடிபெயர்ந்தோருக்கு அடைக்கலம் வழங்கியுள்ளதால், மாணவர்களின் படிப்புப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், குடிபெயர்ந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் குறித்து திருஅவை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறினார், அப்பகுதி கத்தோலிக்கப் பள்ளிகளுக்குப் பொறுப்பாளரான Sylvester Owaj.

குடிபெயர்ந்த மக்களுக்கு தற்காலிக முகாம்களை ஏற்பாடு செய்து உதவிவரும் மனிதாபிமான அமைப்புக்களைத் தொடர்பு கொண்டு, இப்பிரச்சனை குறித்து கலந்தாலோசித்துள்ளதாகவும் கூறினார் Owaj.

SPLA எனப்படும் சூடான் மக்கள் விடுதலை புரட்சிப் படைக்கும், இராணுவத்தினருக்கும் இடையே, ஜூலை மாத துவக்கத்திலிருந்தே இடம் பெற்றுவரும் மோதல்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த இடங்களைவிட்டு குடிபெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.