2016-08-02 16:25:00

கிறிஸ்தவ போதகர் கொலை குறித்து இந்திய கிறிஸ்தவர்கள் கண்டனம்


ஆக.,02,2016. இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், அப்பாவி கிறிஸ்தவப் போதகர் ஒருவர், அடித்தே கொலைச் செய்யப்பட்டுள்ளது குறித்து, தங்கள் வன்மையானக் கண்டனத்தை வெளியிட்டுள்ளன, இந்திய கிறிஸ்தவ சபைகள்.

Yohan Maraiah எனப்படும் இப்போதகர் வாழ்ந்த கிராமத்திற்குள், கடந்த வெள்ளியன்று நுழைந்த ஏறத்தாழ 100 நக்சல்பாரி குழுவினர், அப்போதகரை காட்டிற்குள் இழுத்துச் சென்று, அவர் கைகளைப் பின்னால் கட்டி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். பின்னர், அவரைக் கொன்று ஊருக்கு வெளியே வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

இக்கொலைக் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்ட இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவைத் தலைவர் Sajan K George அவர்கள், இந்தக் கிறிஸ்தவ போதகர் ஏற்கனவே பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இவரின் கோவில் ஒருமுறைக்கு மேல் எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்பில், மத உரிமைகள் உறுதிச் செய்யப்பட்டுள்ளபோதிலும், இத்தகையத் தாக்குதல்கள் கிறிஸ்தவர்கள் மீது தொடர்வது குறித்தும் தன் கவலையை வெளியிட்டார், சாஜன் ஜார்ஜ்.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.