ஆக.01,2016. இறையியல் ஆய்வுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் உருவாக்கப்பட்ட வத்திக்கான் அமைப்பு ஒன்றின் நிர்வாகக் குழுத் தலைவராக, அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், ஆகஸ்ட் 1, இத்திங்களன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த இறையியல் அமைப்பின் தலைவராக, 2015ம் ஆண்டு முதல், அருள்பணி Giuseppe Scotti அவர்கள் செயல்பட்டுவந்த நிலையில், இத்திங்களன்று அருள்பணி லொம்பார்தி அவர்களை தலைவராக நியமித்து, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் நியமனக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
பல இறையியல் வல்லுனர்களின் விருப்பத்தின்பேரில் 2010ம் ஆண்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இராட்சிங்கர் அமைப்பு, இறையியல் ஆய்வுகளை ஊக்குவித்தல், உயர்ந்த கலாச்சார மற்றும் அறிவியல் கருத்தரங்குகளை நடத்துதல் போன்றவற்றிற்கு உதவி வருகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |