2016-07-25 16:35:00

சீனாவில் ஜி.20. கூட்டத்திற்காக கோவில்கள் மூடப்பட உத்தரவு


ஜூலை,25,2016. சீனாவின் Zhejiang மாநிலத்தின் Hangzhou நகரில் செப்டம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் ஜி.20 மாநாட்டையொட்டி அந்நகரிலுள்ள அனைத்து கிறிஸ்தவ கோவில்களும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்படுவதாக அறிவித்துள்ளனர், சீன கம்யூனிச அதிகாரிகள்.

பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டம் முடிந்த பின்னரும் 4 நாட்களுக்கு கோவில்கள் மூடப்பட்டிருக்கும் எனவும் கம்யூனிச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கம்யூனிச அதிகாரிகளின் இந்தச் சட்டம், சீனச் சட்டங்களில் தன் அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை என உரைத்த அந்நாட்டு கிறிஸ்தவ மனித உரிமை வழக்கறிஞர் Li Guisheng அவர்கள், கடவுளை வழிபடுவது, எவ்வகையில் ஜி.20 கூட்டத்தைப் பாதிக்கும் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

சீனாவின் Zhejiang மாநிலத்தில் 20 இலட்சம் கிறிஸ்தவ சபையினரும், இரண்டு இலட்சம் கத்தோலிக்கர்களும் வாழ்கின்றனர்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.