2016-07-22 15:01:00

Hernándezன் சான்று பகரும் வாழ்வுக்கு இறைவனுக்கு நன்றி


ஜூலை,22,2016. Neocatechumenate என்ற உலகளாவிய கத்தோலிக்க அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான கார்மன் ஹெர்னான்டெஸ்(Carmen Hernández) அவர்களின் சான்று பகரும் வாழ்வுக்கு, இறைவனுக்கு நன்றி சொல்வதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்கத் திருஅவையில், விசுவாசிகளை கிறிஸ்தவ நெறியில் உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள Neocatechumenate அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான ஹெர்னான்டெஸ் அவர்கள், மரணமடைந்ததையொட்டி அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

Kiko Argüello அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், இந்த அமைப்பிற்குத் தனது அன்பையும், ஆன்மீக ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளார்.

Hernández அவர்கள், தனது 85வது வயதில் மத்ரித்தில் இச்செவ்வாயன்று இறைபதம் எய்தினார். Kiko Argüello, கார்மன் ஹெர்னான்டெஸ் ஆகிய இருவரால், இஸ்பெயின் தலைநகர் மத்ரித்தில்1964ம் ஆண்டில், Neocatechumenate அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. உலகில் ஒவ்வொரு கத்தோலிக்கப் பங்குகளிலும், ஐம்பது ஐம்பது பேராக இயங்கும் இந்த அமைப்பில், 2007ம் ஆண்டின் நிலவரப்படி, உலகெங்கும் ஏறத்தாழ நாற்பதாயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.