2016-07-19 15:56:00

குடியேற்றதாரர்களை வரவேற்கும் பங்களூரு உயர்மறைமாவட்டம்


ஜூலை, 19,2016. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ஆப்ரிக்கக் குடியேற்றதாரர்களுடன், ஆன்மீகக் கூட்டம் ஒன்றை ஏற்பாடுச் செய்துள்ளது, பங்களூரு உயர் மறைமாவட்டம்.

பெரும்பான்மை ஆப்ரிக்க குடியேற்றதாரர்கள் பேசும் பிரெஞ்ச் மொழியிலேயே ஏற்பாடுச் செய்யப்பட்ட இந்த திருவழிபாட்டுச் சடங்குகள் குறித்து எடுத்துரைத்த பங்களூரு உயர்மறைமாவட்ட பேராயர் Bernard Moras அவர்கள், குடியேற்றதாரர்களை வரவேற்பதும், அவர்களின் தேவைகளுக்கு செவிமடுப்பதும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் முக்கியக் குறிக்கோள் என்றார்.

ஏழை நாடுகளிலிருந்து குடியேறியுள்ள மாணவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் உதவுவதற்கென பங்களூரு உயர்மறைமாவட்டம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனவும் கூறினார் பேராயர் Moras.

இந்த உயர் மறைமாவட்டத்தில், குடியேற்றதாரர்களுக்கு என ஓர் அவை உருவாக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.