2016-07-16 15:11:00

மனித உரிமைகள், நாடுகளால் உருவாக்கப்பட்டவை அல்ல


ஜூலை,16,2016. மனித உரிமைகள், நாடுகளின் அதிகாரம் மற்றும் தேசிய அரசுகளைவிட முக்கியத்துவம் வாயந்தவையாகும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.

நியுயார்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில், மனித உரிமைகள் குறித்து நடைபெற்ற உயர்மட்ட அளவிலான விவாதத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், மனித உரிமைகள் நாடுகளால் உருவாக்கப்பட்டவை அல்ல என்று தெரிவித்தார்.

மனித மாண்பும், உரிமைகளும் மறுக்கப்படும் இக்காலத்தில், ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பாகவே இருக்கின்ற இந்த உரிமைகள் நாடுகளால் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் பேராயர் அவுசா.

ஆயுத மோதல்கள் இடம்பெறும் இடங்களில் அப்பாவி மக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்,  பாலியல் அடிமை, பாலியல் தொழில் அல்லது உறுப்புத் திருட்டுக்காக மனிதர், வர்த்தகம் செய்யப்படுகின்றனர், சிறுபான்மை இன மற்றும் மதத்தவர் பிரித்தெடுக்கப்பட்டு நசுக்கப்படுகின்றனர் என்று, இக்காலத்தில் இடம்பெறும் பல மனித உரிமை மீறல்களைக் கோடிட்டுக் காட்டினார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.