2016-07-15 16:11:00

மாணவர்க்குப் போதைப்பொருள் விற்பனை தடை செய்யப்பட வேண்டும்


ஜூலை,15,2016. இலங்கையில், பள்ளிச் சிறார்க்குப் போதையூட்டும் பொருள்கள் விற்கப்படுவதை ஒழிப்பதற்கு, பொதுமக்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு கேட்டுள்ளார் அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித்.

கொழும்பு உயர்மறைமாவட்டம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும்வேளை, அவ்வுயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் இரஞ்சித் அவர்கள், மாணவர் மத்தியில்  போதைப்பொருள் விற்பனை தடை செய்யப்படுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ராகமா பகுதியில் மாணவர்கள், ஹெரோயின் மற்றும் மரியுவானா போதைப்பொருள்களை உட்கொள்வதை, அப்பகுதி கத்தோலிக்கப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் பார்த்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் இரஞ்சித்.

இலங்கையில், 45 ஆயிரம் பேர் ஹெரோயின் போதைப்பொருளையும், ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர், cannabis போதைப்பொருளையும், பயன்படுத்துகின்றனர் என்று, தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு மையம் கணக்கிட்டுள்ளது. அந்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும், ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர்வரை, புதிதாக, போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர் என்றும் ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.