2016-07-15 15:37:00

இது இரக்கத்தின் காலம்...: உன் உண்மையான இயல்பு என்ன?


ஓர் ஊரில் புகழ்பெற்ற துறவி ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க துறவியின் பழைய மாணவர் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்து எல்லாம் பேசிய பின்னர், குருவிடம் "எனக்கு ஒரு குழப்பம். நான் உங்களிடம் படித்த தியானத்தை சரியாக கடைபிடிக்கிறேன். அது எனக்கு மன அமைதியையும், அறிவுக் கூர்மையையும் தருகின்றது. நான் தியானம் செய்யும் நேரங்களில் நல்லவனாக இருக்கிறேன். ஆனால் மற்ற நேரங்களில் நல்லவனாக இருக்கிறேனா? என்ற சந்தேகம் இருக்கிறது. எனக்கே சில சமயங்களில் தவறுகளை செய்கிறேன் என்றும் தெரிகிறது. தியானம் செய்யும் ஒருவன் இப்படி செய்வது சரிதானா? இதை நினைக்கும் போது என் உள்ளம் கஷ்டமாக இருக்கிறது" என்று கூறினார். அதைக் கேட்ட குரு சிரித்தபடியே, "ஆகவே நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே...?" என்று கேட்டார். அதற்கு மாணவரும், "ஆமாம், அது தவறில்லையா? என்று கேட்டார். குரு அதற்கு, ‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!' என்று கூறினார். உடனே அந்த மாணவர், "ஒரு வேளை என் தியானம் நின்றுவிட்டால்?" என்று வினவினார். குருவோ, "அதுவும் நல்லது தான். அப்போதுதான் உன் உண்மையான இயல்பு உனக்குப் புரியும்" என்று கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.