2016-07-15 16:09:00

15,900,0000 சிறார் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் பாதிப்பு


ஜூலை,15,2016. உலகில் ஏறத்தாழ 15 கோடியே 90 இலட்சம் சிறார் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று, Save the Children என்ற அமைப்பு, தனது புதிய அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

“சமத்துவமற்ற பங்கீடுகள்:ஒவ்வொரு கடைசி சிறார்வரை ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பற்றிக் கூறிய அவ்வமைப்பின் இத்தாலிய ஆலோசகர் Katie Ascough அவர்கள், பல நாடுகளில், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, ஏழ்மையோடு தொடர்புடையது என்று கூறினார்.

உலகில், சிறாரின் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை, 2030ம் ஆண்டுக்குள், தீர்க்க வேண்டுமென்ற திட்டம் இருக்கின்றபோதிலும், அவ்வாண்டில், உலகில், ஐந்து வயதுக்குட்பட்ட 12 கோடியே 90 இலட்சம் சிறார், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்நோக்குவார்கள் என்றும் கூறினார் Ascough.

ஏழ்மை, நலவாழ்வு பிரச்சனைகள், கல்வி வாய்ப்பின்மை, பல்வேறு இனக்குழுக்களிடையே நிலவும் சமத்துவமின்மை போன்றவையும் இதற்கு காரணங்கள் என்றும், வத்திக்கான் வானொலியில் கூறினார் Katie Ascough.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.