2016-07-14 16:03:00

இலங்கை அரசின் சுற்றுலா மேம்பாட்டு முயற்சிகளுக்கு எதிர்ப்பு


ஜூலை,14,2016. இலங்கை அரசு திட்டமிட்டு வரும் சுற்றுலா மேம்பாட்டு முயற்சிகள் அனைத்தும் செல்வந்தர்களை மட்டுமே வளப்படுத்தும் என்று, இலங்கையின் கத்தோலிக்கர்களும், மீனவர்களும் கூறியுள்ளனர்.

இலங்கை அரசின் சுற்றுலாத் துறை தன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், ஐ.நா.வின் உலக சுற்றுலா அமைப்பு, ஜூலை 11 முதல், 14 முடிய மட்டக்கிளப்பு மாவட்டம் பசிக்குடா பகுதியில் அனைத்துலக கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

வெளிநாட்டவரின் முதலீட்டை கவர்ந்திழுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கு, எளிய மக்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைக்கும் என்று கத்தோலிக்கரும், மீனவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அரசு மேற்கொள்ளும் சுற்றுலா மேம்பாட்டு முயற்சிகளால், எளிய மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன என்றும், தற்போது அரசு மேற்கொண்டு வரும் ஒப்புரவு முயற்சிகளுக்கு இச்செயல்பாடு தடையாக உள்ளது என்றும், இக்கருத்தரங்கை எதிர்ப்போர் ஆசிய செய்தியிடம் கூறியுள்ளனர்.

இக்கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை அரசுத் துறையினர் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தி வருவதாகவும் எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.