2016-07-13 15:01:00

இது இரக்கத்தின் காலம்... – பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்?


தன்னுடைய கண்களுக்குத்தான் பார்க்கும் திறன் அதிகம் என்று மூவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த கோயில் குருக்கள், “இன்னும் ஒரு வாரத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. அப்போது கோவிலுக்கு மேலே ஒரு கல்வெட்டு வைக்கப்

போகிறோம். அதில் உள்ள எழுத்துகளை, கீழே நின்றபடியே யார் படிக்கிறாரோ, அவருடைய கண்களின் பார்வைத் திறன்தான் அதிகம்” என்றார்.

அந்த மூவரும் கல்வெட்டு உருவாகும் இடத்தைக் கண்டு பிடித்தனர். தனித்தனியாக, இரகசியமாக சிற்பியைச் சந்தித்து, “கல்வெட்டில் என்ன உள்ளது?” என்று கேட்டனர்.

அதற்கு முதலாமவரிடம், “ஓம் நமசிவாய’என்பது கல்வெட்டின் முதல் வரியில் வருவதாகவும், இரண்டாமவரிடம், “அன்பே சிவம்’ என்பது கல்வெட்டின் இரண்டாம் வரியில் வருவதாகவும்,

மூன்றாமவரிடம் “உபயம் ராமமூர்த்தி’ என்பது மூன்றாம் வரியில் வருவதாகவும் சொன்னார்.

கும்பாபிஷேகம் முடிந்ததும், கோவில் அருகே குருக்களை மூவரும் சந்தித்தனர்.

குருக்கள் மூவரையும் நோக்கி, “கல்வெட்டில் உள்ளதைப் படியுங்கள்”என்றார். சிற்பி சொன்னதை மூவரும் படித்துக் காட்டினர்.

குருக்கள் சொன்னார்: ”மூவருக்குமே பார்வைத் திறன் குறைவு. ஏனென்றால் கல்வெட்டு இன்னும் வைக்கப்படவே இல்லை”என்று. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.