2016-07-09 14:53:00

பொருளாதார-நிதி விவகாரங்கள் குறித்த Motu Proprio


ஜூலை,09,2016. திருப்பீடத்தின் பொருளாதார மற்றும் நிதி சார்ந்த சில விவகாரங்கள் குறித்த, திருத்தந்தையின் “தன் சொந்த விருப்பத்தின் பேரில் (Motu Proprio)” என்ற ஓர் ஆவணம் இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பீடத்தின் பாரம்பரியச் சொத்து நிர்வாகத்திற்கும், திருப்பீடத்தின் பொருளாதாரச் செயலகத்திற்கும் இடையேயுள்ள உறவை விவரிக்கும் இந்தப் புதிய Motu Proprioவில், திருப்பீடச் சொத்துக்களை நிர்வகிப்பது மற்றும் அதைக் கண்காணிப்பது குறித்த நடைமுறைச் சீர்திருத்தங்களை, திருத்தந்தை அங்கீகரித்துள்ளார்.

“Fidelis dispensator et prudens” என்ற தலைப்பில் 2014ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி வெளியிடப்பட்ட Motu Proprioவுடன் தொடங்கப்பட்ட சீர்திருத்தங்கள், இந்தப் புதிய ஆவணத்தின் வழியாகத் தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

திருப்பீடத்தின் சொத்தை நிர்வகித்து அதைக் கண்காணிப்பதில் திருப்பீடத்தின் பொருளாதாரச் செயலகத்தின் பங்கு இப்புதிய Motu Proprioவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

Motu Proprio என்பது, திருத்தந்தை கையெழுத்திட்டு, அவரின் சொந்த விருப்பத்தின் பேரில் வெளியிடப்படும் ஓர் ஆவணமாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.