2016-07-08 15:07:00

மறைசாட்சிகள், இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறை ஏற்பு


ஜூலை,08,2016. எட்டு மறைசாட்சிகள் மற்றும், ஏழு இறையடியார்களை, புனிதர் மற்றும் முத்திப்பேறுபெற்ற நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, அவர்களின் வீரத்துவமான வாழ்வுமுறைகளை அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதர் நிலை திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள் இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து இவ்விபரங்களைச் சமர்ப்பித்தார்.

புனித காவல்தூதர் சகோதரிகள் சபையை ஆரம்பித்த இறையடியார் அருள்பணி Luigi Antonio Rosa Ormières அவர்களின் பரிந்துரையால் ஒரு புதுமை நடைபெற்றுள்ளது. இவர் 1809ம் ஆண்டு பிறந்து,1890ம் ஆண்டில் இறைபதம் அடைந்தார்.

இயேசுவின் திருஇதய மறைத்தூதர்கள் சபையைச் சேர்ந்த இறையடியார் Antonio Arribas Hortigüela மற்றும் அவரோடு சேர்ந்த ஆறு பேர், 1936ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதியும், பொதுநிலை விசுவாசி இறையடியார் Giuseppe Mayr-Nusser அவர்கள், 1945ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியும் கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டனர்.

இன்னும், அகுஸ்தீன் சபையின் ஆயர் Alfonso Gallegos(பிப்.20,1931-அக்.6,1991); மறைமாவட்ட அருள்பணி Raffaele Sánchez García(ஜூன்,14,1911-ஆக.08,1973); பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையின் பொதுநிலை விசுவாசி Andrea Filomeno García Acosta (சன.10,1800-சன.14,1853); புனித சார்லஸ் மறைத்தூதர்கள் சபையின் அருள்பணி Giuseppe Marchetti(அக்.03,1869-டிச.14,1896); பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணி Giacomo Viale(பிப். 28,1830-ஏப்.16,1912); திருநற்கருணையின் திருச்சிலுவை ஆராதனை சபையைத் தோற்றுவித்த திருச்சிலுவையின் மரிய பியா (டிச.02,1847-ஜூலை,01,1919) ஆகிய ஆறு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறை குறித்த விபரங்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.