2016-07-06 16:33:00

பிலிப்பீன்ஸில் மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கு தீவிர முயற்சி


ஜூலை,06,2016. மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கு பிலிப்பீன்ஸ் அரசு இன்னும் தீவிரமாக செயல்படவேண்டும் என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவர், ஆயர், ருபெர்த்தோ சாந்தோஸ் (Ruperto Santos) அவர்கள் கூறியுள்ளார்.

உலகில் நடைபெறும் மனித வர்த்தகத்தைக் கண்காணிக்க அமெரிக்க ஐக்கிய நாடு அமைத்துள்ள ஒரு மேல்மட்டக் குழுவின் அண்மைய அறிக்கையின்படி, பிலிப்பீன்ஸ் நாட்டில் மனித வர்த்தகத்தின் பாதிப்பு குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பிலிப்பீன்ஸ் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக இருந்தாலும், மனித வர்த்தகம் என்ற தீமையை முற்றிலும் ஒழிப்பதற்கு தங்கள் அரசு விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று, ஆயர் சாந்தோஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டு தலத்திருஅவை, தனிப்பட்ட முறையிலும், ஏனைய சமயத்தினரோடு இணைந்தும், மனித வர்த்தகத்தை ஒழிக்க பாடுபட்டு வருவதை, ஆயர் சாந்தோஸ் அவர்கள், எடுத்துரைத்துள்ளார்.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.