2016-07-05 16:02:00

இது இரக்கத்தின் காலம் : மன்னிப்பின் மாண்பு


மன்னிப்பின் பண்புகளை அறிஞர்கள் சிலர் இவ்வாறு கூறிச் சென்றுள்ளனர்:

ஓர் அறையின் கதவு, ஜன்னல்களை மூடி, திரையிட்டுவிட்டால், அவ்வறைக்குள் இருக்கும் காற்று, நலமற்று போகும். அறையைச் சுற்றி, சூரிய வெளிச்சம் இருந்தாலும், சுகமான தென்றல் வீசிக்கொண்டிருந்தாலும் பயனில்லை. சூரிய வெளிச்சமும், தென்றலும் அவ்வறைக்குள் நுழைவதற்கு, திரைகளை விலக்கி, கதவு சன்னல்களைத் திறக்கவேண்டும். மன்னிப்பு இத்தகையது. - Desmond Tutu

மன்னிப்பது எளிதல்ல. பல வேளைகளில், நாம் அடைந்த காயங்களின் வலியைவிட, மன்னிக்கும்போது ஏற்படும் வலி கூடுதலாக இருக்கும். இருப்பினும், மன்னிப்பு இன்றி அமைதியில்லை. - Marianne Williamson

மற்றவர்களின் குறைகளைக் கண்டு அவர்களை மன்னிப்பது எளிது. ஆனால், நமது குறைகளை மற்றவர்கள் பார்த்துவிட்டனர் என்பதை அறிந்தபின்னர், அவர்களை மன்னிப்பது எளிதல்ல. அதற்கு அதிகத் துணிவு தேவை - Jessamyn West

தன்னை மிதித்த கால்களிலும், மலர், தன் நறுமணத்தைப் பதிக்கிறதே, அதுவே மன்னிப்பு. Mark Twain

கசப்பில் நீ வாழும்போது, காய்ந்த சருகைப்போல் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறாய். மன்னிப்பு உனக்கு முழு நலனைத் தருகிறது - Vusi Mahlasela

மன்னிப்பின் மாண்பை உணர, இரக்கத்தின் காலம் நம்மை அழைக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.