2016-07-01 15:21:00

இது இரக்கத்தின் காலம்...: காண முடியவில்லையெனினும் உணரலாம்


வேதத்தைத் தெளிவாகக் கற்ற சீடரிடம், துறவி கேட்டார்,“வேதம் படித்த நீ, கடவுளைப் பற்றி தெரிந்து கொண்டாயா? அவர் இருப்பதை உன்னால் நிரூபிக்க முடியுமா?” என்று. சீடரால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை. உடனே துறவி, ஒரு மண் கலயத்தில் தண்ணீர் எடுத்தார். அதில் கையளவு உப்பை இட்டு கலக்கினார். உப்பு கரைந்தது. சீடரிடம், “உப்பு என்ன ஆனது? அதை உன்னால் காட்ட முடியுமா?” என்று கேட்டார். “அதெப்படி முடியும், அது தான் கரைந்து விட்டதே!” என்று தலையை அசைத்தார் சீடர். துறவி சிறிது உப்பு நீரை சீடரின் வாயில் ஊற்ற, சீடரோ, “நாவால் சுவையை உணர முடியுமே தவிர பார்க்க முடியாது,” என்றார். துறவி தன் சீடரிடம், “கடவுளும் இப்படித்தான்! அவரைக் கண்களால் காண முடியாது. எங்கும் நிறைந்திருக்கும் அவரின் இருப்பை நம்மால் உணர மட்டுமே முடியும்,” என்று விளக்கமளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.