2016-06-30 15:28:00

ஐரோப்பாவை அடைந்துள்ள சிறுவர், சிறுமியரைக் காக்கும் முயற்சி


ஜூன்,30,2016. பெரியோர்களின் துணையின்றி ஐரோப்பாவை அடைந்துள்ள சிறுவர், சிறுமியரைக் காப்பதற்கென இங்கிலாந்தில் Seeking Sanctuary என்ற பிறரன்பு அமைப்பு ஒரு செயலாற்றிவருகிறது.

சட்டத்திற்குப் புறம்பான கடத்தல் தொழிலுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் இலக்காகும் சிறுவர், சிறுமியரை, மீண்டும் அவர்களது குடும்பங்களுடன் இணைப்பதற்கும், தகுந்த பாதுகாப்பான அமைப்புக்களில் இவர்களை சேர்ப்பதற்கும் இவ்வமைப்பினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.நா.வின் குழந்தைகள் நல நிதி அமைப்பான UNICEF வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய அரசுகள் எடுத்துவரும் அரசியல் முடிவுகள், சிறுவர், சிறுமியரின் தேவைகளைக் கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய அரசு விலக முடிவு செய்திருப்பதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளுக்குள் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுகள், ஐரோப்பிய கண்டத்தை அடைந்துள்ள புலம் பெயர்ந்தோரின் நலனைப் புறந்தள்ளியுள்ளன என்று, Seeking Sanctuary பிறரன்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறை கூறியுள்ளனர். 

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.