2016-06-30 14:50:00

இரக்கத்தின் யூபிலி, ஒப்புரவின் நேரம் - திருத்தந்தை டுவிட்டர்


ஜூன்,30,2016. இரக்கத்தின் யூபிலி, ஒவ்வொருவருக்கும் ஒப்புரவின் நேரமாக அமைந்துள்ளது என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று வெளியிடப்பட்டன.

@pontifex என்ற முகவரியுடன், இத்தாலியம், இஸ்பானியம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானியம், போலந்து, போர்த்துகீசியம், இலத்தீன், அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஜுன் 30ம் தேதி முடிய இப்பக்கத்தில் வெளியான செய்திகள் 876 என்பதும், இச்செய்திகளைத் தொடர்ந்து வாசித்து வருபவரின் எண்ணிக்கை 9,495,128 என்பதும் குறிப்பிடத்தக்கன.

இரக்கத்தின் யூபிலி ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் காணொளி வடிவில் மாத செபக் கருத்துக்கள் ஆகிவற்றைப் பதிவு செய்து வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.