2016-06-29 16:43:00

ஜுன் 29, 'பேதுருவின் குகைக் கோவிலில்' இணைந்த வழிபாடு


ஜூன்,29,2016. துருக்கியின் அந்தாக்யா (Antakya) எனுமிடத்தில் அமைந்துள்ள 'பேதுருவின் குகைக் கோவிலில்' ஜுன் 29, இப்புதனன்று, கத்தோலிக்கரும், ஆர்த்தடாக்ஸ் சபையினரும் இணைந்து வழிபாடுகளை நடத்தினர்.

அனத்தோலியா மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி, இயேசு சபை ஆயர் Paul Bizzeti, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரின் பிரதிநிதி, துருக்கியின் திருப்பீடத்தி தூதர், பேராயர் Paul Fitzpatrick Russell ஆகியோர் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்தக் குகைக் கோவில் மறு சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர், கடந்த ஆண்டு மீண்டும் பார்வையாளர்களுக்குத் திறந்துவிடப் பட்டிருந்தது என்று Fides செய்திக் குறிப்பு கூறுகிறது.

உரோம் நகருக்குச் செல்லும் முன்பாக புனித பேதுரு இங்கு ஆயராகப் பணியாற்றினார் என்பதும், இப்பகுதியில்தான் இயேசுவின் சீடர்கள் முதன்முறையாக கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கவை.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.