2016-06-27 16:08:00

ஏழ்மைக்கு எதிராகப் போராட இங்கிலாந்திற்கு அழைப்பு


ஜூன் 27, 2016. ஐரோப்பிய ஒன்றிய அவையிலிருந்து வெளியேறும் விருப்பத்தை பிரிட்டன் மக்கள் வெளியிட்டுள்ளபோதிலும், ஏழ்மைக்கு எதிரானப் போராட்டத்தில் உலக அளவில் வழிநடத்தும் பொறுப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறி விடக்கூடாது என்ற விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது, Christian Aid என்ற கிறிஸ்தவ உதவி அமைப்பு.

உலக மனிதக் குடும்பத்தின் ஒரு பகுதி நாம் என்பதை உணர்ந்து, ஒரே நாடாக ஒன்றிணைந்து ஏழ்மைக்கு எதிராகப் போராட வேண்டிய கடமை இங்கிலாந்திற்கு உள்ளது என்றார், இந்த கிறிஸ்தவ அமைப்பின் உயர் இயக்குனர்  Loretta Minghella.

ஐரோப்பிய ஒன்றிய அவையிலிருந்து வெளியேறுவது என்ற பிரிட்டனின் தீர்மானம், அதன் உலகு சார்ந்த சமூகக் கடமைகளில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்திய Minghella அவர்கள், உலக ஏழைகளின் தேவை குறித்து எவரும் பாராமுகமாக இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

உலகில் வன்முறை, பசி, அநீதி போன்றவைகளால் துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் குறித்து எவரும் மறந்து விடக்கூடாது என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்

Christian Aid என்ற உதவி அமைப்பின் இயக்குனர் Minghella. 

ஆதாரம் : ICN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.