2016-06-26 13:34:00

கத்தோலிக்கோஸ் 2ம் Karekin அவர்களின் மறையுரை


ஜூன்,26,2016. பசித்திருந்த கூட்டத்திற்கு உணவளிக்க, கிறிஸ்து புதுமை செய்தார். இந்தப் புதுமை, கிறிஸ்துவின் திருஅவையின் முக்கிய பணிகளில் ஒன்றாக உள்ளது. பரிவன்பின் வழியாக, தேவையில் இருப்போருக்கு ஆதரவு வழங்க நற்செய்தி அழைக்கிறது. நற்பணிகள், செபம், கருணைநிறை வழிபாடு, தர்மம் கொடுத்தல் ஆகியவை வழியாக, விசுவாசத்தை உயிர்த்துடிப்புள்ளதாக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் வழியாக, கடவுளோடு இணைப்பணியாளர்களாக ஆகிறோம். துன்பங்கள், அதேநேரம், செல்வம், ஆடம்பரம் ஆகியவற்றால் இறை விசுவாசம் சோதிக்கப்படுகின்றது. பயங்கரவாதம், அந்நியர்மீதான வெறுப்பு, தன்னலத்தை நோக்கிய இலாபங்கள், சிற்றின்பங்கள், போதைப்பொருள், இன்னும் பிற கருத்தியல்களும் நம் விசுவாசத்தைப் பரிசோதிக்கின்றன. ஆன்மீக மற்றும் அறநெறி விழுமியங்கள், இறைவனால் உருவாக்கப்பட்ட குடும்ப அமைப்புகள் போன்வற்றை அதிகரித்துவரும் உலகப்போக்கு திசை திருப்புகின்றது. நவீன வாழ்வின் தீமையின் வேர், கடவுளின்றி உலகை அமைக்க முயற்சிக்கிறது. ஆயினும், உலகில், நன்மைத்தனம் மேலோங்கி இருக்கின்றது. கிறிஸ்துவின் திருநற்கருணை மற்றும் போதனைகளால் இக்காலத்திய சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. படைப்பைப் பாதுகாத்தல், பொதுவான பிரச்சனைகளுக்கு எதிராக இணைந்து நிற்பது போன்றவற்றிலும், உலகில் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்புவதிலும், கிறிஸ்துவின் திருஅவை ஒன்றாக உள்ளது என்பதை நாம் மீண்டும் உறுதி செய்துள்ளோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, தாங்கள், அர்மேனியாவுக்கு மேற்கொண்ட சகோதரத்துவத் திருப்பயணத்திற்கு நன்றி. இரு திருஅவைகளும், அன்பிலும், ஒத்துழைப்பிலும் உறுதியாக இருக்கவும், உடன்பிறப்பு உணர்வுக்குச் சான்று பகர்வதற்குப் புதிய வாய்ப்புகள் வழங்கப்படவும் நாம் செபித்தோம்.  இவ்வாறு மறையுரையாற்றிய கத்தோலிக்கோஸ் 2ம் Karekin அவர்கள், இவ்வழிபாட்டில், அசீரியர்கள், பெலாருஷ்யர்கள், கிரேக்கர்கள், ஜார்ஜியர்கள், யூதர்கள், யஜிதிகள், குர்த் இனத்தவர், ஜெர்மானியர்கள், போலந்து நாட்டவர், இரஷ்யர்கள், உக்ரைன் நாட்டவர் என, பலர் கலந்து கொள்வது நம் சகோதரத்துவத்தை வலிமைப்படுத்தியுள்ளது என்றும் கூறினார். இவ்வழிபாட்டில் திருத்தந்தையும் மறையுரைற்றினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.