2016-06-24 16:36:00

சீன அரசு கட்டுப்பாட்டு திருஅவையில் வத்திக்கானின் தலையீடில்லை


ஜூன்,24,2016. சீன அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் திருஅவையிலிருந்து வெளியேறியதால், 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயர் Thaddeus Ma Daqin  அவர்கள், தற்போது சீன அரசின் கட்டுப்பாட்டுடன் செயலாற்றும் திருஅவையை புகழ்ந்து பேசியதில் கத்தோலிக்க திருஅவைக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என கூறியுள்ளார், திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி.

சீன அரசின் கட்டுப்பாடிலுள்ள திருஅவையிலிருந்து விலகியதால், அரசால் நான்கு ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த Shanghai மறைமாவட்ட துணை ஆயர்  Ma Daqin  அவர்கள், தற்போது அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கத்தோலிக்க அவையை புகழ்ந்துள்ளது, சீனாவோடு நெருங்கிச்செல்ல விரும்பும் வத்திக்கான் முயற்சியின் ஒரு பகுதி என சில பத்திரிகைகள் வெளியிட்டிருக்கும் செய்தி தவறானது என தெரிவித்துள்ளார் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர்.

ஆயர் Ma Daqinடமிருந்து தங்களுக்கு எவ்வித நேரடித் தகவலும் இல்லையென்றும், சீனக் கத்தோலிக்கர்கள் அனைவருக்காகவும், ஆயர்களுக்காகவும் திருத்தந்தை தினசரி செபிப்பதாகவும் அறிவித்தார் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், அருள்பணி லொம்பார்தி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.