2016-06-24 16:15:00

Kyrgyzstan குடியரசின் திருப்பீடத் தூதுவர் நியமனம்


ஜூன்,24,2016. Kyrgyzstan குடியரசின் திருப்பீடத் தூதுவராக பேராயர் பிரான்சிஸ் அசிசி சுள்ளிக்காட் அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு ஏப்ரல் 30ம் தேதி முதல் Kazakhstan மற்றும் Tadjikistan நாடுகளின் திருப்பீடத் தூதுவராகப் பணியாற்றிவரும் பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், தற்போது Kyrgyzstan திருப்பீடத் தூதுவராகவும் பொறுப்பேற்க உள்ளார்.

ஏற்கனவே 4 ஆண்டுகள் ஜோர்டன் மற்றும் ஈராக்கின் தூதுவராகவும், 4 ஆண்டுகள் ஐ.நாவிற்கான நிரந்தரப் பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளார், இந்தியாவின் கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராயர் சுள்ளிக்காட்.

மேலும், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை பேராயர் Fouad Twal அவர்கள், வயது முதிர்வு காரணமாக  நிர்வாக பணிகளிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை பகுதியின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் Pierbattista Pizzaballa அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த அருள்பணி பிட்சாபாலா அவர்கள், இது நாள் வரையில் பிரான்சிஸ்கன் துறவுசபையின் சார்பாக, எருசலேமின் புனித பகுதிகளுக்கான பொறுப்பாளராகப் பணியாற்றி வந்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.