2016-06-23 15:21:00

103வது உலக புலம்பெயர்ந்தவர் நாளின் மையக் கருத்து


ஜூன்,23,2016. “புலம்பெயர்ந்த சிறார், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் குரலற்றவர்” என்ற தலைப்பை, 103வது உலக புலம்பெயர்ந்தவர் நாளுக்கெனத் தெரிவுசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவுசெய்துள்ள இத்தலைப்புடன் இப்புதனன்று அறிக்கை வெளியிட்டுள்ள, திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தவர் அவை, சிறியவரிலும் மிகச் சிறியவர் மீது திருத்தந்தை கவனம் செலுத்த விரும்புவதை இத்தலைப்பு சுட்டிக்காட்டுகிறது என்று கூறியது.

புலம்பெயர்ந்த சிறார், கைவிடப்பட்டவர்களாக, வேறு நாடுகளை வந்து சேர்கின்றனர், இவர்கள், தங்களின் குரல்கள் கேட்கும்படிச் செய்வதற்கு இயலாதவர்களாய் உள்ளனர் மற்றும் இவர்கள், கடும் மனித உரிமை மீறல்களுக்கு எளிதாய்ப் பலியாகிறார்கள்      என்றும் கூறியது அத்திருப்பீட அவை.

மிகவும் வலுவிழந்தவர்களின் தேவைகள் மீது கவனம் செலுத்தப்படுவதற்கு திருத்தந்தை இத்தலைப்பின் வழியாக முயற்சிக்கிறார் என்றுரைத்த அந்த அவை, இன்று, புலம்பெயர்ந்தவர் பிரச்சனை ஓர் உலகளாவியக் கூறாக மாறியுள்ளது, அனைத்துக் கண்டங்களுமே இந்தப் பிரச்சனையை எதிர்கொள்கின்றன என்றும் கூறியது.

103வது உலக புலம்பெயர்ந்தவர் நாள், 2017ம் ஆண்டு சனவரி 15ம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.