2016-06-20 16:35:00

பாலியல் வன்முறைத் தண்டனையிலிருந்து விலக்குப் பெற இயலாது


ஜூன்,20,2016. போரின் ஆயுதமாக, பாலியல் வன்முறைப் பயன்படுத்தப்பட்ட காலம் முடிந்துவிட்டது என்று, போரில் பாலியல் வன்முறையை ஒழிக்கும் முதல் உலக நாளான இஞ்ஞாயிறன்று கூறினார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

குவாத்தமாலா நாட்டு உள்நாட்டுப் போரின்போது, பாலியல் வன்முறை புரிந்த இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியுள்ளதைக் குறிப்பிட்டு, இவ்வாறு தெரிவித்துள்ளார் பான் கி மூன்.

இதேபோல், சாட் நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் Hissène Habréம், பாலியல் வன்செயல், பாலியல் அடிமைத்தனம் உட்பட மனித சமுதாயத்திற்கு எதிராக இழைத்த குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்காக குற்றவாளி எனத் தீர்ப்பிடப்பட்டுள்ளார். 

போர்களோடு தொடர்புடைய பாலியல் வன்முறையை ஒழிக்கும் நோக்கத்தில், 2015ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி, ஐ.நா.பொது அவை, இந்த உலக நாள், ஜூன் 19ம் தேதி கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அறிவித்தது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.