2016-06-20 16:05:00

ஐந்து அருளாளர்களுக்கு அக்டோபர் 16ல் புனிதர் பட்டம்


ஜூன்,20,2016. வருகிற அக்டோபர் 16ம் தேதி ஐந்து அருளாளர்கள், புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள் என்று, இத்திங்களன்று திருத்தந்தையின் தலைமையில் நடந்த கர்தினால்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கிறிஸ்தவப் பள்ளிகள் சகோதரர் சபையின் மறைசாட்சி Salomone Leclercq,  நாசரேத் திருநற்கருணை மறைபோதக சகோதரிகள் சபையையும் திருநற்கருணை பரிகார கழகத்தையும் ஆரம்பித்த Palencia ஆயர் Manuel González García; அமலமரி பிள்ளைகள் சபையைத் தொடங்கிய அருள்பணி Lodovico Pavoni, புனித ஜான் பாப்பிடிஸ்ட் சபையைத் தொடங்கிய அருள்பணி Alfonso Maria Fusco, கர்மேல் சபையின் துறவி மூவொரு கடவுளின் எலிசபெத் ஆகிய ஐந்து அருளாளர்களும், 2016ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி ஞாயிறன்று புனிதர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இத்திங்கள் டுவிட்டர் செய்தியாக, “நாம் எல்லாரும் நம் பொதுவான இல்லமாகிய விண்ணகம் நோக்கிப் பயணம் செய்துகொண்டிருக்கின்றோம், அங்கே, நம்மால், இந்தப் பிரபஞ்சத்தின் பேருண்மையை மகிழ்வோடும், வியப்போடும் இரசித்துக்கொண்டிருக்க இயலும்”என்ற வார்த்தைகள் வெளியாயின. இன்னும், இஸ்ரேலின் முன்னாள் அரசுத்தலைவர் Shimon Peres அவர்கள்,  இத்திங்கள் காலையில் திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.