2016-06-20 16:28:00

Crete தீவில் உலக ஆர்த்தடாக்ஸ் சபைகளின் உயரிய பேரவை


ஜூன்,20,2016. Crete தீவில் Heraklionலுள்ள புனித Minas பேராலயத்தில், திருவழிபாடு நிறைவேற்றி, உலக ஆர்த்தடாக்ஸ் சபைகளின் தூய மற்றும் உயரிய பேரவையை ஆரம்பித்து வைத்தார் கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு.

இதில் மறையுரையாற்றிய முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், ஒவ்வோர் ஆர்த்தடாக்ஸ் சபையும் தன்னகத்தே வளமையைக் கொண்டிருக்கின்றது மற்றும் இச்சபைகள், ஒரே, தூய, கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தலிக்கத் திருஅவையின் உயிரூட்டமான அங்கம் என்றார்.

இன்னும், அசீரிய மற்றும் அர்மேனியக்  கிறிஸ்தவர்களுக்கு எதிராக, 1900மாம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒட்டமான்கள் நடத்திய படுகொலைகளை இப்பேரவையின் இஞ்ஞாயிறு திருவழிபாட்டில் நினைவுகூர்ந்தார் சிரிய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை 2ம் இக்னேஷியஸ் எஃப்ரேம் கரீம். அந்நேரத்தில், அவருக்கு எதிராக, ஆலயத்துக்கு வெளியே தற்கொலை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் அக்குண்டுவெடிப்பை நடத்திய அந்நபர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.