2016-06-17 16:52:00

உலக ஊட்டச்சத்து அறிக்கை 2016


ஜூன்,17,2016. உலகில் 44 விழுக்காட்டு நாடுகளில், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, உடல் பருமன் ஆகிய இரண்டு பிரச்சனைகளால், அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுவதாக, 2016ம் ஆண்டின் உலக ஊட்டச்சத்து அறிக்கை கூறுகிறது.

129 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மூன்றில் ஒருவர் ஏதோ ஒரு வகைப் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் துன்புறுவதாகக் கூறுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை ஊட்டச்சத்துப் பற்றாக்குறை மற்றும் உடல் பருமன் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசின் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் ஊட்டச்சத்து துறை மருத்துவர் மீனாக்ஷி பஜாஜிடம் பேசியபோது, ''இந்தியாவில் 22 விழுக்காட்டு மக்கள் அதிக உடல் எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். உடல் பருமன் பிரச்சனையுடன் 4.9 விழுக்காட்டு மக்கள் துன்புறுகிறார்கள். 12 வயதுள்ள குழந்தைகளை நீரிழிவு நோய்க்காக நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம்'' என்றார். 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.