2016-06-14 16:18:00

மறைசாட்சிகள், இறையடியார்கள் குறித்த விபரங்கள் ஏற்பு


ஜூன்,14,2016. முத்திப்பேறு பட்டம், புனிதர் பட்டம் வழங்குவதற்கு உதவியாக, 115 மறைசாட்சிகள் மற்றும் ஏழு இறையடியார்கள் குறித்த விபரங்களை இச்செவ்வாயன்று ஏற்றுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதர் பட்ட திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், இச்செவ்வாய் காலையில், இந்த விபரங்களை திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார்.

இஸ்பெயினின் Almería பேராலயத் தலைவர் இறையடியார் Giuseppe Álvarez-Benavides y de la Torre மற்றும் அவரோடு சேர்ந்த 114 பேரும், 1936க்கும் 1938ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டனர்.

1851ல் பிறந்து, 1923ல் காலமான Olomouc பேராயர் Antonio Cirillo Stojan;

1896ல் பிறந்து, 1975ல் காலமான, திருச்சிலுவையின் பணிகள் மூன்றாம் சபையை ஆரம்பித்த அருள்பணி Vincenzo Garrido Pastor;

1897ல் பிறந்து, 1967ல் காலமான, தூய ஆவியார் மறைப்பணிச் சபையைச் சேர்ந்தவரும், மூவொரு கடவுளின் திருநற்கருணை மறைப்பணிச் சபையைத் தொடங்கியவருமான அருள்பணி Paolo Maria Guzmán Figueroa;

1910ல் பிறந்து, 1932ல் காலமான பிரான்சிஸ்கன் சபையின் Luigi Lo Verde;

1902ல் பிறந்து, 1932ல் காலமானபுனித பெர்னதெத் சபையின் Bernardo dell’Annunziazione;

1869ல் பிறந்து, 1931ல் காலமான கர்மேல் அன்னை மரி சகோதரிகள் சபையை ஆரம்பித்த Maria Elisa Oliver Molina;

1899ல் பிறந்து, 1973ல் காலமான கிறிஸ்துவின் Ancelle Guadalupane சபையை ஆரம்பித்த Maria di Gesù dell’Amore Misericordioso;

ஆகிய ஏழு இறையடியார்களின் வீரத்துவமான புண்ணியப் பண்புகள் குறித்த விபரங்கள் இச்செவ்வாயன்று திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.