2016-06-14 16:40:00

நோன்பிருக்கும் முஸ்லிம்களுடன் கிறிஸ்தவர்கள் ஒருமைப்பாடு


ஜூன்,14,2016. இரமதான் புனித மாதத்தில், நோன்பிருக்கும் முஸ்லிம்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, ஜூன் 17, வருகிற வெள்ளியன்று கிறிஸ்தவர்கள் நோன்பிருக்குமாறு, ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள் கேட்டுள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, பாக்தாத் முதுபெரும் தந்தையின் அலுவலகம், குண்டு வெடிப்புகள் மற்றும் ஆயுத மோதல்களால் ஈராக் தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும்வேளை, ஈராக்கிலும், அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் அமைதியும், நிலையான தன்மையும் ஏற்பட, நோன்பிருந்து செபிப்போம் என்று கூறியுள்ளது.

ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் மனிதாபிமானப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஈராக் கிறிஸ்தவ சபைகள், சமய வேறுபாடின்றி, மனிதாபிமான மற்றும் ஆன்மீக உதவிகளையும் ஆற்றி வருகின்றன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.  

நோன்பிருக்கும் முஸ்லிம்களுக்கு “Iftar” உணவு வழங்குதல், பல முகாம்களில் புலம்பெயர்ந்த மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் விநியோகம் செய்தல், மருந்தகங்களுக்கு மருந்துகள் அனுப்புதல், பல்கலைக்கழக மாணவர்களை வரவேற்றல் போன்ற உதவிகளை, ஈராக் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு ஆற்றி வருகின்றது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.