2016-06-13 13:53:00

இது இரக்கத்தின் காலம்: பிறரின் துன்பம் துடைக்கும் கருணை மனம்


அமெரிக்க ஐக்கிய நாட்டின் 16வது அரசுத்தலைவரான ஆபிரகாம் லிங்கன் அவர்கள், வழக்கறிஞராக இருந்தபோது, ஒருவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது. அது பொய் வழக்கு என்பதை லிங்கன் அறிந்தார். அந்த நபர், பல ஆண்டுகளுக்கு முன்பு பழகிய  நண்பர். எனவே, இந்த நண்பருக்காக லிங்கன் அவர்கள் நீதிமன்றத்தில் ஏழு நாள்கள் கடுமையாக வாதாடி, அவர் மீது சாட்டப்பட்டிருந்த கொலைக் குற்றம் தவறானது என்று நிரூபித்து, அவருக்கு விடுதலை வாங்கித் தந்தார். விடுதலையான அந்த நண்பர், லிங்கன் அவர்களுக்கு நன்றி சொல்லி,  கட்டணத்தையும் கொடுத்தார். ஆனால் அந்தத் தொகையை வாங்க மறுத்துவிட்டார் லிங்கன். எவ்வளவோ வற்புறுத்தியும், “இது என் பழைய நண்பருக்கு நான் செய்த உதவி”என்று சொல்லி மறுத்துவிட்டார். பின்னர், அந்த நண்பரின் மனைவி, தனது கணவர் விடுதலையான மகிழ்ச்சியில், தனது கணவரை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இதை அங்கு நின்றவர்களிடம் சுட்டிக்காட்டிய ஆபிரகாம் லிங்கன் அவர்கள், “இதுதான் என் கட்டணம்”என்று சொன்னாராம். கருணை உள்ளம், பிறரின் துன்பம் துடைக்க உதவும், பிறரின் மகிழ்வில் இன்பம் காணும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.