2016-06-06 16:46:00

ஒரு இலட்சம் ஆண்டுகளில் ஆர்க்டிக் கடல் பனிக்கட்டி மறையும்


ஜூன்,06,2016. பனிக்கட்டியால் சூழப்பட்டிருக்கும் ஆர்க்டிக் பெருங்கடலில், இன்னும் ஒரு இலட்சம் ஆண்டுகளில், முதன்முறையாக, பனிக்கட்டிகள் இல்லாமல் போகும் என,  அமெரிக்க ஐக்கிய நாட்டின் தேசிய பனி மற்றும் பனிக்கட்டித் தகவல்கள் மையம் வெளியிட்டுள்ள விபரங்களில் தெரியவந்துள்ளது.

2016ம் ஆண்டின் ஜூன் முதல் தேதி நிலவரப்படி, ஆர்க்டிக் பெருங்கடலில், ஒரு கோடியே 11 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பனி படர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக ஒரு கோடியே 27 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பகுதி பனி இருந்தது. இது தற்போது 15 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குக் குறைந்துள்ளது. இந்த அளவு, ஆறு பிரித்தானியாக்களின் பரப்பளவுக்குச் சமமாகும் என்று, கேம்பிரிஜ்ட் பல்கலைக்கழக்த்தின் பேராசிரியர் Peter Wadhams தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு இலட்சத்திலிருந்து ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஆண்டுக்கு முன்னதாக இது போன்று நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்க்டிக் பெருங்கடல், உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் மிகச் சிறியதும் ஆழமற்றதாகும். முற்காலத்தில் கடல்பனியால் மூடப்பட்டிருந்த இப்பெருங்கடல் தற்போது காலநிலை மாற்றம் காரணமாகப் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது.

இதுபோல், பூமியும், செவ்வாயும் மிக அருகருகே இந்த மாதத்தில் வரவுள்ளதாகவும், மற்றோர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.