2016-06-03 15:37:00

பஞ்சசீலக் கொள்கை நாளான ஜூன் 1 தேசிய விடுமுறை


ஜூன்,03,2016. இந்தோனேசியாவின் சமயச்சார்பற்ற அரசமைப்பின் பஞ்சசீலக் கொள்கையமைப்பு தொகுக்கப்பட்ட நாளான ஜூன் முதல் தேதியை, தேசிய விடுமுறை நாளாக அரசு அறிவிப்பதற்குத் தீர்மானித்திருப்பது குறித்த மகிழ்வைத் தெரிவித்துள்ளார் ஜகார்த்தா பேராயர் Ignatius Suharyo Hardjoatmodjo.

பஞ்சசீலக் கொள்கை, இந்தோனேசியாவின் இன, மொழி, கலாச்சார மற்றும் சமய வேறுபாடுகளையும் கடந்து, ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கு நாட்டின் ஐந்து தூண்களாக அமைந்துள்ளது என்றும், இக்கொள்கை நாட்டினர் எல்லாரும் அமைதியில் வாழ உதவும் என்றும் பேராயர் Suharyo அவர்கள் கூறினார்.

அரசின் இந்த அறிவிப்பை செப வழிபாடு வழியாகச் சிறப்பித்த இந்தோனேசியத் தலத்திருஅவை, இக்கொள்கையை அமல்படுத்துவது குறித்த திட்டம் ஒன்றையும் ஆரம்பித்து, இது ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி இந்தோனேசியா உருவானதன் வரலாற்று, மெய்யியல் மற்றும் அரசியல் காரணங்களை மக்கள் அறிந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார் பேராயர் Suharyo.

ஒரே கடவுளில் நம்பிக்கை, நீதியும் மனிதக் கலாச்சாரமும், ஒற்றுமை, ஞானத்தால் வழிநடத்தப்படும் சனநாயகம், சமூக நீதி ஆகிய ஐந்துமே இந்தோனேசியாவின் பஞ்சசீலக் கொள்கையாகும்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.