2016-06-02 15:46:00

நவீன அடிமைத்தன ஒழிப்பு குறித்த கருத்தரங்கில் திருத்தந்தை


ஜூன்,02,2016. இவ்வுலகில் நிலவும் நவீன அடிமைத்தனங்களின் அனைத்து விதமான வடிவங்களையும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் திருப்பீடம் ஏற்பாடு செய்துள்ள அனைத்துலக நீதிபதிகளின் கூட்டத்தில் திருத்தந்தையும் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திருப்பீடத்தின் சமூக அறிவியல் கழகத்தால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள இந்த இரு நாள் கருத்தரங்கின் முதல் நாள் மாலை நிகழ்வுகளில் திருத்தந்தை பங்கெடுக்க உள்ளார்.

இன்றைய மனித அடிமைத்தனங்களான, மனிதர்கள் வியாபாரப் பொருள்களாக கடத்தப்படல், அடிமைத் தொழில், மனித உறுப்புக்கள் கடத்தல், திட்டமிட்ட குற்றங்கள் போன்றவைகளை ஒழிப்பது குறித்து இந்த நீதித்துறை அதிகாரிகளின் கருத்தரங்கு விவாதிக்கும்.

ஏற்கனவே இதே நோக்கத்துடன் 2014ம் ஆண்டில், உலகின் முக்கிய மதத்தலைவர்களுடனும், 2015ல் உலகின் பல்வேறு நகர்களின் மேயர்களுடனும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளது திருப்பீட சமூக அறிவியல் அவை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.