2016-05-30 16:41:00

இலங்கை காரித்தாசின் இலவச நகரும் மருத்துவமனை


மே,30,2016. இலங்கையில், நகரும் மருத்துவமனைகள் வழியாக, கிராமப்புற ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவிகளை வழங்கத் திட்டமிட்டு வருகிறது அந்நாட்டு காரித்தாஸ் நிறுவனம்.

கொழும்பு நகருக்கு வடக்கேயுள்ள Delathura கிராமத்தில், புனித ரோச் கத்தோலிக்க ஆலயத்தில் முதல் இலவச நகரும் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

தேவையில் இருப்போர்க்கு உதவவும், உதவி என்பதன் உண்மையான அர்த்தத்தை மக்கள் கண்டுணரவும், மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழு இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. ஒரே நாள் காலையில் மட்டும், மருத்துவர்கள் ஏறத்தாழ 400 மக்களைப் பார்வையிட்டுள்ளனர்.

Delathura கிராமத்தில், பொதுவாக இளையோர் 15,16 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர், தனிப்பட்ட சுத்தம் மற்றும் நலவாழ்வு குறித்தவைகளுக்கு இவர்கள் கவனம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகின்றது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.