2016-05-27 15:59:00

மின்னணு கழிவுகளில் இந்தியா 5வது இடத்தில்


மே,27,2016. மின்னணுக் கழிவுகளை உருவாக்குவதில் உலகளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆய்வு நடத்தியவர் கூறுகையில், உலகளவில் இந்தியா இரண்டாவது அலைத்தொலைபேசி சந்தையாக உள்ளது. 1.03 பில்லியன் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். அதேநேரத்தில் மின்னணுக் கழிவை உருவாக்குவதில் 5வது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் 18.5 இலட்சம் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகள் சேர்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் 100 கோடிக்கும் அதிகமான அலைத்தொலைபேசிகள் உற்பத்தி செய்யப்பட்டன எனக் கூறினார்.

மேலும், இந்தியாவில், 100 கோடி அலைத்தொலைபேசிகள் புழக்கத்தில் இருக்கின்றன. இவற்றில் 25 விழுக்காடு, ஆண்டுதோறும் மின்னணுக் கழிவாக வருகிறது என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள அமைப்பு சாரா துறையில், இந்தியாவில் உள்ள மின்னணுக் கழிவை 95 விழுக்காடு கையாள முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதில் கடினமும், அதிக செலவும் ஏற்பட்டன. 

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.