2016-05-25 16:24:00

பொது மறைக்கல்வியுரையில் சைகை மொழியில் வாழ்த்து


மே,25,2016. இப்புதனன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை, சைகை மொழியால் முதலில் வாழ்த்தி, பொது மறைக்கல்வியுரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரையில், பிளாரன்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் தேசிய காதுகேளாதோர் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டதால், அவர்களை வாழ்த்தும் விதத்தில், முதலில் கரங்களை உயர்த்தி, பின்னர், உள்ளங்கைகளைத் திருப்பும் சைகை மொழியால் வாழ்த்து தெரிவித்து உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் நிகழ்வில், இலத்தீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் இத்தாலிய பார்வையிழந்தோர் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், உரோம் நகர் அகுஸ்தீனோ ஜெமெல்லி பல்கலைக்கழக மருத்துவமனையில் இப்புதனன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். பிறந்த குழந்தை குணமாக்கமுடியாத நோயால் துன்புறும்போது, அதன் வாழ்வைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.