2016-05-25 16:44:00

இலங்கை-கத்தோலிக்கரும் புத்த மதத்தினரும் இயற்கை உரத்தோட்டம்


மே,25,2016. மரங்கள் நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், புத்தமத வேசாக் விழாவன்று, இலங்கையில், கத்தோலிக்கரும் புத்த மதத்தினரும் இணைந்து இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, தோட்டங்கள் அமைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

மாபெரும் சுற்றுச்சூழல் ஆர்வலராகிய புத்த பெருமானுக்குக் காட்டும் நன்றியின் அடையாளமாகவும், வேதியப் பொருள்களைப் பயன்படுத்தாமல் மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், இதில் ஈடுபட்டுள்ளதாக, "Piyawara” என்ற தன்னார்வல குழுவின் தலைவர் ஜூட் சமந்தா அவர்கள் கூறினார்.

பல்வேறு முஸ்லிம், கத்தோலிக்க மற்றும் புத்த மதத்தினர், Piyawara குழுவுக்கு, 600க்கும் மேற்பட்ட உள்ளூர் பழ மரங்களை வழங்கியுள்ளனர்.

புத்த பெருமான், Salmal காட்டில் பிறந்தார், போதி மரத்தடியில் ஞானம் பெற்றார்,  Kusinara காட்டில் இறந்தார். இவ்வாறு அவர் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் சுற்றுச்சூழலோடு தொடர்பு கொண்டிருந்தன என்று, Piyawara குழு கூறியது.

மேலும், கத்தோலிக்க வீட்டுத் தோட்டக் கழகத்தின் தலைவராகிய Preethi Saparamadhu அவர்களும், வேதியப் பொருள் கலவையில்லாத தோட்டங்களை அமைப்பதற்கு, பங்குப் பேரவைகள், கத்தோலிக்கரை ஊக்கப்படுத்தி வருகின்றன என்று தெரிவித்தார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.